×

விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த நபரை முதலுதவி அளித்து காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த நபரை முதலுதவி அளித்து காப்பாற்றிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர் P.விக்னேஷ் பாண்டி (கா.எண்.58598), N-2 காசிமேடு காவல் நிலைய சுற்றுக் காவல் (ஜிப்சி) வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

விக்னேஷ் பாண்டி, கடந்த 20.02.2024 அன்று மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு S.N.செட்டி ரோட்டில் ஜிப்சி ரோந்து வாகனத்துடன் பணியிலிருந்தபோது, அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது, ஒரு ஆட்டோ மோதியதில், அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் ஓடிச்சென்று சுயநினைவின்றி கீழே விழுந்த நபருக்கு, காவலர் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட CPR முதலுதவி சிகிச்சையை அந்த நபருக்கு அளித்தபோது, அவர் லேசாக மூச்சு விடப்பட்டு, சற்று சுயநினைவு திரும்பியது.

பின்னர், உடன் பணியிலிருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப , மேற்படி சம்பவத்தில் விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்த நபருக்கு தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றிய காவலர் P.விக்னேஷ் பாண்டியை (கா.எண்.58598) இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

The post விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த நபரை முதலுதவி அளித்து காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police ,Commissioner ,Chennai ,Sandeep Rai Rathore ,Armed Forces Motor Vehicle Division ,Armed Force ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...