×

வேளாண் பொருட்கள் இறக்குமதியால் ஆத்திரம்; உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

கீவ்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், அந்த நாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கு போலந்து அரசு அடைக்கலம் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் உக்ரைனில் இருந்து அதிகளவு வேளாண்மை பொருட்களை போலந்து அரசு இறக்குமதி செய்வதாகவும் இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் போலந்து நாட்டு விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி போராடி வருகின்றனர்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் வோலடிமிர் ஜெலன்ஸ்கி, ‘போலந்து விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இது போலந்து விவசாயிகளின் பிரச்னைகள் மட்டுமல்ல. இது அனைத்து ஐரோப்பிய நாட்டு விவசாயிகளின் பிரச்னை. இதுகுறித்த பேச்சுவார்த்தையில் அனைத்தும் தீர்க்கப்படும் என நம்புகிறேன்,’என்று அதில் கூறியிருந்தார்.

The post வேளாண் பொருட்கள் இறக்குமதியால் ஆத்திரம்; உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Zelensky ,Kiev ,Russia ,Ukraine ,NATO ,Poland ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...