×

மணிமங்கலத்தில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீதர்மேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதரமேஸ்வரர் உடனுறை ஸ்ரீதேவாம்பிகை கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் நிர்வாக பணிகள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. கோயில் வளாகத்தில் சிவன் சன்னதி, அம்பாள் சன்னதி என தனித்தனி சன்னதிகள் உள்ளன. கடந்த நூறு ஆண்டுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோயில் சீரமைப்பு பணி தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் புனரமைப்பு பணி நிறைவடைந்தது. அதன்பிறகு தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 15ம் தேதி கணபதி பூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. 4 கால பூஜையுடன் தொடர்ந்து 7 நாட்களாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து மூலவர் தர்மேஸ்வரர் உடனுறை தேவாம்பிகைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், மணிமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post மணிமங்கலத்தில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீதர்மேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Sridharmeswarar ,Temple ,Manimangalam ,Sriperumbudur ,Sridharameswarar Udanurai Sridevambikai Temple ,Kunradthur Union ,Archeology Department ,Hindu Religious Charities Department ,Shiva ,Ambal ,
× RELATED சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை