×

கோவை நூலக அறிவிப்பு மதுரை எய்ம்ஸைப் போல் அல்ல.. 2026 ஜனவரியில் திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது; சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பாமகவின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத் தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.

அதனையடுத்து கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் எங்கு அமைக்கப்படும் என் கேட்டார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும். கோவையில் நூலகம் அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததைப் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கோவையில் நூலகம் கட்டி முடிக்கப்படும். திறக்கப்படும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு (வானதி ஸ்ரீனிவாசன்) முறையாக அழைப்பு வரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

The post கோவை நூலக அறிவிப்பு மதுரை எய்ம்ஸைப் போல் அல்ல.. 2026 ஜனவரியில் திறக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Goa Library ,Madurai AIIMS ,Principal ,K. Stalin ,Chennai ,Sathiwari ,Chief Minister ,Mu. K. Stalin ,Bhamaka ,Satiwari ,SATIWARI SURVEY ,Goa ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...