×

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு முதுகில் குச்சி, வயிற்றில் உதை தான் மிஞ்சியது: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு முதுகில் குச்சி, வயிற்றில் உதை தான் மிஞ்சியது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான ஒன்றிய அரசின் பரிந்துரையை நிராகரித்த விவசாயிகள், திட்டமிட்டபடி நேற்று மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாப், அரியானா கானவுரி எல்லையில் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீசார், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 24 வயது பஞ்சாப் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 160 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப், அரியானா எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; விவசாயிகளின் உயிர் காக்கப்படா விட்டால்… இந்தியா எப்படி அமைதியாக இருக்கும்?. கானௌரி எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பட்டிண்டாவைச் சேர்ந்த இளம் விவசாயி சுபாகரன் சிங் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மோடி அரசு விவசாயிகளை என்ன செய்து உள்ளது பாருங்கள். முதலில் 750 விவசாயிகளின் உயிரை பறித்தது. லக்கிம்பூரில் மோடி அமைச்சரின் மகன் விவசாயிகளை காரால் இடித்துக் கொன்றார். மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சூரில் பாஜக ஆட்சியில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் உயிரிழந்தார்கள். மோடியே நாடாளுமன்றத்தில் விவசாயிகளை “தீவிரவாதிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” போன்ற மோசமான வார்த்தைகளால் அழைத்தார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு முதுகில் குச்சி, வயிற்றில் உதை தான் மிஞ்சியது. மோடி அரசே இது அவமானம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு முதுகில் குச்சி, வயிற்றில் உதை தான் மிஞ்சியது: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : BJP ,Mallikarjuna Karke ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Garke ,EU government ,
× RELATED பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை: காங்கிரஸ் புகார்