×

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை கிடுகிடு உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சன்ன அரிசி விலை உயர்ந்து வருகிறது. டெல்டாவிலும் விளைச்சல் குறைந்துள்ளதால் அரிசி விலை அதிகரித்ததாக கூறிய வணிகர்கள் இந்த ஆண்டு முழுவதும் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றனர். கடந்த 4 மாதங்களில் படிப்படியாக இட்லி அரிசி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாயும், சன்ன ரக சாப்பாட்டு அரசி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடந்த 4 மாதங்களில் 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி விலை 300ல் இருந்து 500 ரூபாய் வரை உயர்ந்ததாக கூறும் நடத்தர மக்கள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் விவசாயம் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. இதன் காரணமாக அரசியின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரையிலும் 26 கிலோ அரிசி சிப்பம் ரூபாய் 300 வரையிலும் அதிகரித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Delta ,Sanna ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...