×
Saravana Stores

கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சாத்தான்குளம், பிப். 22: கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். சாத்தான்குளம் அருகே நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமாக திகழும் கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 4 மணி முதல் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதும் உட்வீதியுலா நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜ பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Katarimangalam Shiva temple ,Satankulam ,Pradosha ,Katarimangalam ,Sivakami ,Ambal Sametha Ajayakoothar temple ,Masi month Pradosha ,
× RELATED அரசு பணிக்கு போலி ஆணை இன்ஸ்பெக்டர்...