×

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

கேடிசி நகர், பிப். 22: கங்கைகொண்டான் அருகே குறிச்சிகுளத்தைச் சேர்ந்தவர் உடையார் (56). இவர் சிப்காட் தொழிற்பூங்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்தார். சிப்காட் நுழைவு வாயில் அருகே நான்குவழிச்சாலையில் இருந்து சிப்காட்டுக்கு திரும்பிய லாரி பைக் மீது மோதியது. இதில் உடையார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : KDC Nagar ,Wodeyar ,Kurichikulam ,Gangaikondan ,Sipkot Industrial Park ,Chipkot ,Dinakaran ,
× RELATED சலூன் கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி