×

மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோயிலில் பாலாலய விழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் பாலாலயம் விழா நேற்று நடைபெற்றது. முருகப்பெருமான் நரகாசுரனை வதம் செய்துவிட்டு திரும்பும்போது இத்திருத்தலத்தில் இறங்கி சிவனை பூஜித்து சென்றதால் மயில்ரங்கம் என்ற பெயர் பெற்ற வரலாற்று சிறப்புடைய ஊர் ஆகும். புராண கால சிறப்புகளை உடையது மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோவில். கிருஷ்ணதேவராய மன்னரால் ஒரு பகுதி கட்டப்பட்டு பிறகு ஒரு பகுதி பாண்டிய மன்னர்களால் கட்டுப்பட்ட கோயிலாகும். கொங்கு மண்டலத்திலேயே சப்தஸ்வர தூண்கள் எனப்படும் இசைத்தூண்கள் உள்ள கோயிலாகும். கோயிலில் உள்ள பெரும்பாலான சுவாமிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவர் அரசின் பாதுகாப்பில் உள்ளன. கோயிலில் 2 சுரங்க அறைகளும் உள்ளன. கோயிலுக்கு 600 ஏக்கருக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

The post மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோயிலில் பாலாலய விழா appeared first on Dinakaran.

Tags : Balalaya Festival ,Vaideeswaran Temple ,Mylarangam ,Vellakoil ,Palalayam ,Lord ,Muruga ,Narakasura ,Lord Shiva ,Mylarangam Vaideeswaran Temple ,
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...