×

இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கோவை: அகில இந்திய கூட்டுப்போராட்ட குழு முடிவின்படி நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் நிறுவன பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். அனைத்து பதவி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பாக நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில், எல்ஐசி சுரேஷ் , இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மகேஷ், மீனாட்சி சுப்ரமணியம், கோபி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கம் மற்றும் நலச்சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

The post இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharna ,Coimbatore ,All India Joint Strike Committee ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில...