×

கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து

போச்சம்பள்ளி, பிப்.22: போச்சம்பள்ளி அருகே உள்ள அயலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு, விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று, கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். கரும்பு தோட்டத்திற்கு யாரவது தீ வைத்தார்களா அல்லது அவ்வழியாக சென்றவர்கள் சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் போட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதா என போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Velu ,Ayalambatti ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...