×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

காரிமங்கலம், பிப்.22: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருணாச்சலேஸ்வரர் கோயிலில், மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். இதேபோல் பெரியாம்பட்டி பசுபதீஸ்வரர் கோயில், அனுமந்தபுரம் சிவன் கோயில் என பல்வேறு கோவில்களில் மாசி மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Nandi ,Phulapatti Arunachaleswarar Temple ,Varapirai Pradosha ,Masi ,Dharmakartha Saravanan ,Shiva ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்