×

ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி மகம் மகா பிரம்மோற்சவ திருவிழா கோயிலின் பரம்பரை அறங்காவலரான ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா குடும்பத்தார் ஏற்பாட்டின் பேரில் மாசி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள், முக்கிய வீதிகள் வழியாக சுவாமி உலா நடைபெற்றது. ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ராம்கோ குடும்பத்தார் மற்றும் ராம்கோ சிமெண்ட் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Meenakshi ,Sundareswarar Thirukalyanam ,Rajapalayam Sokar Temple ,Rajapalayam ,Thirukalyana Utsavam ,Masi Magam Maha Brahmotsava festival ,Masi Flag Hoisting ,Ramco Chairman ,PR ,Venkatramaraja ,
× RELATED சித்திரை திருவிழாவையொட்டி...