×

திருச்சுழியில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

திருச்சுழி: திருச்சுழியில் இளம்வயது திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருச்சுழி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான இணைய பாதுகாப்பு மற்றும் இளம் வயது திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் திருச்சுழியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் திருச்சுழி நீதிமன்ற நீதிபதி அபர்ணா தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கொடியசைத்து வைத்தார்.

 

The post திருச்சுழியில் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Virudhunagar District Legal Affairs Committee ,Thiruchuzhi District Legal Affairs Committee ,
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி