×

குமுளி அருகே சிறுத்தை தாக்கி சினைப்பசு பலி

கூடலூர்: குமுளி அருகே வண்டிப்பெரியாறு பகுதியில், சிறுத்தை தாக்கியதில் சினைப்பசு உயிரிழந்தது. குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு கிராம்பி எஸ்டேட் வெடிக்குழிபகுதியைச் சேர்ந்தவர் ஏசையா. நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு விடப்பட்ட இவரது நிறைமாத கர்ப்பிணி பசு மாடு இரவாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று காலையில், அவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்கு தாக்கி பசுமாடு கொல்லப்பட்ட நிலையில் கிடப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததை யடுத்து, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அப்பகுதியில் காணப்பட்ட கால்தடங்கள் சோதித்து அது சிறுத்தையின் கால்தடங்கள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வண்டிப்பெரியாறு கால்நடை மருத்துவர் டாக்டர் சில்பா சம்பவ இடத்தை பார்வையிட்டு விரிவாக ஆய்வு செய்தார். இது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்த சம்பவத்தை தெடர்ந்து சிறுத்தையை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்க கோரி அப்பகுதியினர் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புலியை பிடிக்க கூண்டு அமைக்க அனுமதி பெற உயர் அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post குமுளி அருகே சிறுத்தை தாக்கி சினைப்பசு பலி appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Vandipperiyar ,Isaiah ,Vedikkuzhi ,Vandipperiyaru ,Dinakaran ,
× RELATED குமுளியில் குடியிருப்பு பகுதியில்...