×

சிலையாவூரணி கிராமத்தில் கால்நடைகள் மருத்துவ முகாம்

காளையார்கோவில்: ராஷ்டிரிய கோகுல் மிசன் திட்டத்தின் கீழ் காளையார்கோவில் ஒன்றியம் சிலையாவூரணி கிராமத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் சினையுறா மாடுகள் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமையில் டாக்டர். சிலம்பரசன், டாக்டர் கணேஷ் குமார், டாக்டர்.விஜயகுமார், கால்நடை உதவியாளர் மணிவேல் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பணியாற்றினர். இந்த மருத்துவ முகாமில் இப்பகுதியில் உள்ள சுமார் 150 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 50 பயனாளிகளுக்கு தாதுஉப்பு கலவை வழங்கப்பட்டது. புருசெல்லா தடுப்பூசி 10 கிடேரி கன்றுகளுக்கு போடப்பட்டது. சினைபிடிக்காத 15 மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post சிலையாவூரணி கிராமத்தில் கால்நடைகள் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Siliyavurani village ,Kalayarkoil ,Kalayarkoil Union ,Silyyavarani village ,Assistant Director ,Dr. ,Saravanan ,Silambarasan ,Ganesh Kumar ,Dinakaran ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி