×

மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது

மதுரை: மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விசாலாட்சி நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகர கலால் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது இருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் தத்தனேரி கேவி சாலை இந்திரா நகர் 2வது தெருவச் சேர்ந்த புவனேஸ்வரன் (42), புது விளாங்குடி கணபதி நகரை சேர்ந்த ராஜ்குமார் (36) எனவும், 100 கிராம் கஞ்சா, இரண்டு வாள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா, வாள், கஞ்சா விற்றதில் கிடைத்த ரூ.25,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Municipal Art Division ,Visalatchi Nagar ,Madurai-Dindigul highway ,Madura ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு