×

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் மதுரை வரை இயக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லுடன் நிறுத்தப்பட்ட மதுரை – விழுப்பும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, மீண்டும் மதுரையிலிருந்து இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை – விழுப்புரம் இடையே ‘‘ஏழைகளின் ரதம்’’ எனும் பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் சாதாரண கட்டணத்தில் இயங்கி வந்தது. இந்த ரயில் பொதுமக்கள், கூலித் தொழிலாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் இந்த ரயிலை கொரோனா காலம் முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் இயக்கியது. இதன்படி மதுரையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மீண்டும் மாலை 4.50க்கு புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் மதுரை வந்து சேரும்.

 

The post இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் மதுரை வரை இயக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dindigul ,Madurai - Villupuram ,Dinakaran ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...