சென்னை: காவல்துறை சார்பில் ரூ.23.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மாநிலத்தின், அமைதியை பேணி பாதுகாத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை ரூ.438.05 கோடி செலவில் 2,637 காவலர் குடியிருப்புகள், ரூ.36.64 கோடி செலவில் 36 காவல் நிலைய கட்டிடங்கள், ரூ.69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதர கட்டிடடங்கள், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை தலைமைச்செயலகத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் – வி.எச். ரோட்டில் ரூ.16.57 கோடி செலவில் கட்டப்பட்ட 96 காவலர் குடியிருப்புகள், ரூ.95.38 லட்சத்தில் கட்டப்பட்ட 4 காவல்நிலையங்கள் மற்றும் ஒரு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் என ரூ.23.53 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
The post ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.