×

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபர் விரும்பினால் காணொலி மூலம் சிறையில் இருந்தே வாதிடலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: நிதி நிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் சுபிக்ஷா நிறுவன இயக்குநர் சுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சுப்ரமணியன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் உள்ள சில வழக்குகளில் தானே வாதிட விரும்புவதாகவும் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த வழக்குகளில் அவர் சொந்தமாக வாதிட விரும்புகிறார் என்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்ரல் 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதனிடையே, மனுதாரரின் கோரிக்கைப்படி அவராகவே வாதிட அனுமதிப்பதாக இருந்தால் சிறையிலிருந்தே காணொலி மூலம் வாதிட அனுமதிக்கலாம். இதற்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபர் விரும்பினால் காணொலி மூலம் சிறையில் இருந்தே வாதிடலாம்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Subhiksha ,Subramanian ,Madras High Court ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...