×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் துபாய் டூட்டி ஃபிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 3வது சுற்றில் போலந்தின் மேக்தலெனா ஃபிரீச்சுடன் (26 வயது, 53வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) முதல் செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் டை பிரேக்கரில் வசப்படுத்தினார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய மேக்தலெனா 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. பரபரப்பான கடைசி செட்டில் மேக்தலெனாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ரைபாகினா 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 39 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி (28 வயது, 26வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியை (28 வயது, 11வது ரேங்க்) வெளியேற்றினார். ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா (25 வயது, 40வது ரேங்க்) 6-4, 7-5 என நேர் செட்களில் லாத்வியா நட்சத்திரம் யெலனா ஆஸ்டபென்கோவை (26 வயது, 9வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Rybakina ,Dubai Duty Free Tennis quarterfinals ,Dubai ,Kazakhstan ,Elana Rybakina ,Dubai Duty Free Tennis Championship ,United Arab Emirates ,Magdalena Freich ,Poland ,Dubai Duty Free Tennis ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா