×

பா.ஜவுக்கு 100 சீட் கூட தேறாது: கார்கே விளாசல் 400 தொகுதிக்கு ஆசைப்படுகிறார்கள்

அமேதி: பா.ஜ இந்த தேர்தலில் 400 தொகுதிக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முறை 100 சீட் கூட கிடைக்காது என்று கார்கே தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் நடந்த ராகுல்காந்தியின் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அமேதியில் கோடிக்கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நிலுவையில் உள்ளன. இன்னும் ஏன் திட்டங்கள் முழுமையடையாமல் உள்ளன என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் அமேதி, ரேபரேலிக்கு வேலை செய்ய விரும்பவில்லை. அங்கு பாஜ சதி செய்கிறது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜ கூறினாலும், 100 இடங்களை தாண்ட முடியாது. இந்த முறை, அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடுமையாக உழைத்த பூமி இது. அமேதி மக்களுக்கும், காந்தி குடும்பத்திற்கும் ஆழமான உறவு உள்ளது. இவ்வாறு பேசினார்.

The post பா.ஜவுக்கு 100 சீட் கூட தேறாது: கார்கே விளாசல் 400 தொகுதிக்கு ஆசைப்படுகிறார்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Karke Vlasal ,Amethi ,Kharge ,Congress ,president ,Mallikarjuna Kharge ,Rahul Gandhi ,Amethi, Uttar Pradesh ,Kharke Vlasal ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...