×

மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு – கால் கப்,
மாங்காய் வற்றல் – 6,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
புளி – நெல்லிக்காய் அளவு,
மிளகு, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
பூண்டு – 6 பல்,
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு – சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.

The post மாங்காய் வற்றல் ரசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்