×

மராட்டியத்தில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம்.. 300 பேருக்கு சாலையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம்!!

புல்தானா: மராட்டியத்தில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட 300 பேருக்கு சாலையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம் அரங்கேறியுள்ளது. மராட்டியம் மாநிலம் புல்தானா மாவட்டத்தில் கடந்த ஒரு வரமாக கோயில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று சுமார் 2000 கிராமங்களில் இருந்து 600 பேர் பங்கேற்று பிரசாத உணவு அருந்தினர். சில நிமிடங்களில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் 600 நோயாளிகள் வந்ததால் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் வெளியே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 300 நோயாளிகளை சாலையில் படுக்கவைத்து ஒருமுனையில் இருந்து மறு முனைக்கு கயிறு கட்டி அதில் குளுக்கோஸ் பாட்டில்களை தொங்கவிட்டு சிகிச்சை தரப்பட்டது. இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் டார்ச் லைட் அடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post மராட்டியத்தில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம்.. 300 பேருக்கு சாலையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம்!! appeared first on Dinakaran.

Tags : Marathi ,Buldhana district ,Maharashtra ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!