×

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
ஈச்சாங்காடு- மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் இன்று ரத்து செய்யப்படுகிறது.மேலும் விழுப்புரம்- திருச்சி இடையே பராமரிப்பு பணிகளால் விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2:30 மணிக்கு வந்து சேரும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சென்னையில் மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும் வகையில் வந்தே பாரத் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் – திருச்சி இடையே ரயில்வே கேட் பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதையொட்டி நெல்லையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், விருத்தாசலம் – திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் – திருச்சி, திண்டுக்கல் – விழுப்புரம் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், தேஜஸ் விரைவு ரயில், வைகை விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.இதை போல் சென்னையில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வண்டி வழக்கமான வழிதடத்தை தவிர்த்து இன்று கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது.

இந்த இடங்களில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும். குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இதே மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railway ,Vande Bharat ,Chennai – ,Tirunelveli ,Eichangadu- ,Mathur route ,Nellai Vande Bharat ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...