×

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க மாட்டோம்: 3,500 பக்தர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ராமேஸ்வரம்: இலங்கை அரசை கண்டித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை புறக்கணிப்பதாக மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்து படகுகளை பறிமுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

புனித அந்தோனியார் ஆலய திருவிழா பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3,500 பக்தர்களும் மற்றும் இலங்கை தரப்பிலிருந்து 4,000 பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இருநாட்டு அரசாங்கமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்களை விடுவிக்க கோரி நடைபயண போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து சுமார் 3500 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவிழாவை புறக்கணிப்பதாக மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்து படகுகளை பறிமுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

The post கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க மாட்டோம்: 3,500 பக்தர்கள் எடுத்த அதிரடி முடிவு! appeared first on Dinakaran.

Tags : Kachchathivu Anthony temple festival ,Rameswaram ,St. Anthony's temple festival ,Kachchathivu ,Sri Lankan government ,Kachchathivu Anthony's Temple Festival ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...