×

மக்களவை தேர்தல்: எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை; 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா: ஜெயக்குமார் விளக்கம்!!

சென்னை: மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக-வில் இன்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;

“எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை”: ஜெயக்குமார்
மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா; அதனால் இது வாரிசு அரசியலில் வராது என்றார்.

பா.ஜ.க. மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு: ஜெயக்குமார்
அதிமுகவில் பற்று உள்ளவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். பூச்சாண்டியை போல மிரட்டி ஆள்பிடிக்கும் வேலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். பழனிசாமி, திரிஷா குறித்து பேசிய முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை திரிஷா குறித்து ஏ.வி.ராஜு குறித்த கருத்துகளை ஏற்க முடியாது. அதிமுக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது; கடைசி நிமிடத்தில் கூட எதுவும் நடக்கும் என்று மீண்டும் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

The post மக்களவை தேர்தல்: எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை; 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா: ஜெயக்குமார் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Jayalalitha ,Jayawardhan ,2014 election ,Jayakumar ,Chennai ,Former Minister ,Lok Sabha ,Supreme Leader ,Chennai Raiappetta ,2014 ,Dinakaran ,
× RELATED 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குப்பதிவு