×

பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்!

சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியது. சென்னை புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிறுசேரி-கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் சேவையை, நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது. சாத்திய ஆய்வு அறிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியது. 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேலும் சென்னை பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை 50 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது. பூவிருந்தவல்லியிலிருந்து திருமழிசை வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை கோரியுள்ளது.

The post பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்! appeared first on Dinakaran.

Tags : Bundamalli-Baranthur ,Coimbed-Avadi ,Chennai ,Chennai Metro Company ,Metro Rail ,Coimbed ,Avadi ,Metro Rail Administration ,Bundamalli- ,Barantur ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...