×

விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். டிச. 1-ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவது குறிப்பிடத்தக்கது….

The post விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Ramanathapuram ,Thuthukudi ,Kannyakumari ,Tenkasi ,Weather ,Chennai ,Tamil Nadu ,Thoothukudi ,Kanyakumari ,Weather Center ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்