×

திருவையாறு அருகே வடுககுடியில் உத்தரபிரதேச விவசாயிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உத்தரபிரதேச மாநில விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்களுக்கு வாழை இலை உற்பத்தி குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி அருகே போதாவூரிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உத்தரபிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு வாழை சாகுபடி குறித்து பிப்ரவரி 17ம் தேதி முதல் இன்று வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வடுகக்குடியிலுள்ள முன்னோடி வாழை விவசாயி மதியழகன் தோட்டத்தில் உத்தரபிரதேச மாநில முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் நேற்று களப் பயிற்சி மேற்கொண்டனர்.இதில், வாழை இலை உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குறித்து மதியழகன் விளக்கம் அளித்தார்.பயிற்சி முகாமில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானிகள் மோகனசுந்தரம், கிரிபாசு, மக்கள் தொடர்பு அலுவலர் ரவிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவையாறு அருகே வடுககுடியில் உத்தரபிரதேச விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Vadukakudi ,Tiruvaiyar ,Thanjavur ,Thanjavur district ,Basti district ,National Banana Research Center ,Bodhavur ,Trichy ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...