புதுக்கோட்டை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2024-2025 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பச்சைத் துண்டு அணிந்து வந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளும், விவசாயத்துறையும் ஏற்றம் பெரும் வகையில் அறிவிப்புகள் இருந்தது. இந்த வேளாண்மை பட்ஜெட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் விவசாயிகளும் தங்களுது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருப்பையா கூறியதாவது; தமிழக அரசு சார்பில் வேளா ண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து விவசாயிகளை போற்றி பாதிகாத்துள்ளது. விவசாயத்துறையும் ஏற்றம் பெரும் வகையில் அறிவிப்புகள் இருந்தது. 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும். மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு. எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு. இப்படி பல அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது என்றார்.
The post மண்வளம் காத்து, விவசாயிகளையும் காக்கும் வேளாண் பட்ஜெட் appeared first on Dinakaran.