×

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் தென்னை விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி: தென்னை விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விவசாய விழிப்புணர்வு இயக்க தலைவர் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தென்னையின் வளர்ச்சிக்கு ஏறத்தாழ 16 வகையான பயிர்சத்துக்கள் தேவைப்படுகிறது. இவற்றில் தழை, மணி, சாம்பல் சத்து போன்ற பேரூட்டகங்கள் தென்னைக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றன. தென்னைக்கு நட்டு 1 வருடத்திற்கு உரமிடுவது அவ சியம். தென்னை பயிரிடப் படும் பகுதி பெரும்பாலும் மணல் அதிகமுள்ள நன்கு வடியும் நிலமாகவும், பயி ருக்கு தேவையான ஊட் டச்சத்துக்கள் மற்றும் அங்ககப்பொருட்கள் அளவு குறைந்தும் காணப்படுகின் றது. எனவே இத்தகைய நிலங்களில் வருடந் தவறாது உரமிடுவதன் மூலமே தென்னையில் நல்ல விளைச்சலை அடைய முடியும். இயற்கை உரங்களை இடுவதன் மூலம் மண்ணின் நீர்ப்பிடிப்பு மற்றும் பயிர்ச் சத்துக்களை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் அதி கரிக்கிறது. இதனால் நீர் மற்றும் பயிர்ச்சத்துக்கள் விரையமாவது கணிசமாக குறைக்கப்படுகிறது. நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றிற்கு சராசரி யாக 540 கிராம் தழை. 250 கிராம் மணி 820 கிராம் சாம்பல் சத்தினை நிலத் திலிருந்து எடுத்துக்கொள் கிறது.

The post நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் தென்னை விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Karur District Agriculture Awareness Movement ,President ,Selvaraj ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...