×

திருமங்கலம் நேசனேரியில் புதிய பள்ளி கட்டிட பணி துவக்கம் மாற்று இடம் இல்லாததால் கோயிலில் படிக்கும் மாணவ, மாணவிகள் உரிய இட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டு வரும் நிலையில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்யாததால் மாணவ, மாணவிகள் கோயிலில் தங்கி படிக்கும் அவலநிலை உள்ளது. திருமங்கலம் அருகேயுள்ள நேசனேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமையாசிரியர், ஆசிரியர் என இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில் தற்போது 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் கட்டி நீண்ட ஆண்டுகள் ஆனதால் கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி கட்டிடத்தினை முழுவதும் இடித்து விட்டு புதியதாக ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு கடந்த பிப்.16ம் தேதி இதற்கான பணிகள் துவங்கின. புதிய கட்டிடத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேசனேரி கிராமத்தில் மாற்று இடம் தேடப்பட்டது. தற்போது பள்ளியின் அருகேயுள்ள ஊராட்சிக்கு சொந்தமான நூலக கட்டிடத்தினை வழங்கும் படியும் கேட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்த இடமும் ஒதுக்கீடு செய்யவில்லை என தெரிகிறது. இதை தொடாந்து கடந்த பிப்.16ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் பள்ளியின் அருகேயுள்ள மரத்தடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். இதனை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் மாணவ, மாணவிகளின் நலன் கருதி நேசனேரி கிராமத்திலுள்ள வாலகுருநாதசாமி அங்கள ஈஸ்வரி கோயில் வளாகத்தில் அமர்ந்து படிக்கும்படி கேட்டு கொண்டனர்.

The post திருமங்கலம் நேசனேரியில் புதிய பள்ளி கட்டிட பணி துவக்கம் மாற்று இடம் இல்லாததால் கோயிலில் படிக்கும் மாணவ, மாணவிகள் உரிய இட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirumangalam Nesaneri ,Thirumangalam ,Panchayat ,Nesaneri ,Tirumangalam ,
× RELATED மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத...