- பழனி கிரிவாலா ரோட்
- மதுரை
- பழனி
- கிரிவலசு
- வீதி
- Icourt
- ஜெயசீலன்
- திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர்களின் தொழிலாளர்
- மாநகராட்சிப் பகுதி
மதுரை: பழநி கிரிவலவீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி நகராட்சி பகுதியில் சுமார் 2 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கிரிவல வீதியில் மட்டும் சுமார் 500 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். போக்குவரத்திற்கு எந்தவித இடையூறின்றி வியாபாரம் செய்கிறோம். அரசால் தள்ளுவண்டியும், அரசின் கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. பலரும் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டையும் பெற்றுள்ளனர். இதற்கான காலம் முடிந்து விட்ட நிலையில் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. விற்பனைக்குழு அமைக்கப் பட்டிருந்தாலும், இதுவரை விற்பனை பகுதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென அதிகாரிகளும், போலீசாரும் எங்களது கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. எனவே, பக்தர்கள் அதிக கூட்டம் வரும் காலமான தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தர திருவிழாவின் போது தலா 10 நாட்கள் கடைகள் போடாமல் இருக்கிறோம். மற்ற நாட்களில், நாங்கள் இடையூறின்றி வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்குமாறும், சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டையை வழங்குமாறும், விற்பனை பகுதியை அடையாளம் கண்டு அறிவிக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
The post பழநி கிரிவல வீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.