×

ராஜினாமா செய்யவில்லை: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம்

சென்னை: ராஜினாமா செய்யவில்லை என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னை பல்கலைக் கழகம் ரூ.424 கோடி வருமானவரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது. இதனால் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு தற்போதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அந்தப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக உள்ள ஏழுமலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 3 ஆண்டுகால பதிவாளர் பணியில் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஏழுமலை, ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, அது உண்மையான தகவல் அல்ல என்று மறுத்ததோடு, வருமான வரித்துறைக்கு ஆவணங்களை பதிவு செய்யும் வேலையில் தான் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

The post ராஜினாமா செய்யவில்லை: சென்னை பல்கலை பதிவாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Madras University Registrar ,Chennai ,Chennai University ,Etummalai ,Income Tax Department ,State ,Bank of India ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா