×

கடந்தாண்டு புயல், வெள்ள பாதிப்பால் ரூ.208 கோடிக்கு பயிர் இழப்பு: வேளாண் துறை முதன்மை செயலர் அபூர்வா தகவல்

சென்னை: கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் – வெள்ள பாதிப்புகளில் ரூ.208 கோடி வரை பயிர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது கணக்கிடப்பட்டுள்ளதாக வேளாண் துறை முதன்மை செயலர் அபூர்வா தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: வேளாண் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிவன் சம்பா ரகம் போன்ற பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம், புதிய வகை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அரிசி ரகங்களை ஊக்குவிப்பது, ஆய்வு செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

வட்டார அளவில் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்’ என்ற உயிர்மை வேளாண்மை குறித்த மாதிரி பண்ணை தொடர்பாக 15, 280 கிராமங்களில் குறிப்பிட்ட பயிர் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதுதவிர, தோட்டக்கலை பண்ணையை இயந்திரமயமாக்குதல் குறித்தான கண்காட்சி பிறநாடுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுத்த உள்ளோம். அந்தவகையில் இதற்கான இயந்திரங்களை கொள்முதல் செய்ய கூடுதலாக 10 சதவீதம் மானியம் அளிக்கப்படும். அதேபோல், நடமாடும் இயந்திரங்களை கொண்டு விவசாயிகளின் விளை நில இடங்களுக்கே சென்று நெல்லை உலர்த்தி தர வழிவகை செய்துள்ளோம்.

அதன்படி, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, வெங்காய சாகுபடியில் இயந்திர மயமாக்கல் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். 100 உழவர் அங்காடிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பொது பிராண்ட் மூலம் விற்பனை செய்ய முடியும். இதுதவிர, அந்த பொருட்களை இணைய வழி மற்றும் நேரடி வழியில் விற்பனையும் செய்ய முடியும். இந்த உழவர் அங்காடியில் அரிசி தொடங்கி எண்ணெய் வரை எல்லா பொருட்களும் விற்பனைக்கு வர உள்ளது. கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையை ரூ.195ல் இருந்து ரூ.215 ஆக உயர்த்தி உள்ளோம்.

இதில் ஒன்றிய அரசின் ஒரு பங்கு கூட கிடையாது. கரும்பு விளைச்சலில் ஒரு ஹெக்டேருக்கு 111 டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ள பாதிப்பு பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா பயிர்களுக்குமான இழப்பு ரூ.208.20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான விரைவில் அரசாணை வெளியாக உள்ளது. துாத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்பு பயிர்களுக்கு காப்பீடு மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வேளாண்துறையின் கூடுதல் செயலாளர் சங்கர் மற்றும் விஜயராஜ்குமார், குமரவேல்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post கடந்தாண்டு புயல், வெள்ள பாதிப்பால் ரூ.208 கோடிக்கு பயிர் இழப்பு: வேளாண் துறை முதன்மை செயலர் அபூர்வா தகவல் appeared first on Dinakaran.

Tags : Agriculture ,Principal Secretary ,Apoorva ,Chennai ,Department ,Agriculture Department ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்