சென்னை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தேர்வும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு பொது இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று கூறப்படும் ‘சீட்டா’ தேர்வும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இதில் டான்செட் தேர்வுக்கு 34 ஆயிரத்து 20 பேரும், சீட்டா தேர்வுக்கு 5 ஆயிரத்து 281 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 301 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எம்.சி.ஏ. படிப்புக்கான டான்செட் தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 9ம் தேதி காலையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கான டான்செட் தேர்வு அன்றைய தினம் பிற்பகலிலும் நடைபெறுகிறது. அதே போல் சீட்டா தேர்வு அடுத்த மாதம் 10ம் தேதி காலையில் நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில் 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
The post டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு appeared first on Dinakaran.