×

நடிகை கவுதமியிடம் ரூ.9.9 கோடி மோசடி செய்த பாஜ பிரமுகர் அழகப்பன் உட்பட 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: நடிகை கவுதமியிடம் ரூ.9.9 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜ பிரமுகர் அழகப்பன் உட்பட 19 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். ரூ.55 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மயிலாப்பூரை சேர்ந்த டேனியல்ராஜ்(43), வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன்(32), மயிலாப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுமன்(38), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த துரைப்பாக்கம் கண்ணகிநகரை சேர்ந்த அக்பர் அலி(33), ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய தண்டையார் பேட்டையை சேர்ந்த வடிவேல்(32), மாதவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட விஜய்(எ)பப்பி விஜய்(22),

நடிகை கவுதமிக்கு சொந்தமான இடங்களை போலி ஆவணம் மூலம் ரூ.9.9 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வேளச்சேரி காந்தி சாலையை சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன்(63), புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தமிழரசன்(24), அயனாவரம் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேந்திரன்(30), திருவொற்றியூரை சேர்ந்த சிலம்பரசன்(எ)சிலம்பா(23), போலீஸ் என கூறி 10 ஆயிரம் யூரோ டாலர் பறித்த வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த சையது இம்ரான்(31), மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அசாருதீன்(32), வண்டலூர் காஜா(எ)காஜா மொய்தீன்(45), கொட்டிவாக்கம் பிரசாந்த்(எ)லால்(27), அரும்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட விக்கி(எ)க்ரைம் விக்கி(24), கஞ்சா விற்ற வழக்கில் புளியந்தோப்பு அருப்பு கஸ்தூரி(எ)கஸ்தூரி(50), கொடுங்கையூர் வேலு(எ)அருப்பு வேல்(38), கொருக்குபேட்டை கீதா(40), வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் ஈக்காட்டுத்தாங்கல் சிவராஜ்(33) ஆகிய 19 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post நடிகை கவுதமியிடம் ரூ.9.9 கோடி மோசடி செய்த பாஜ பிரமுகர் அழகப்பன் உட்பட 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Alagappan ,Gautami ,Chennai ,Daniel Raj ,Mylapore ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...