- நீலகிரி மாவட்டம்
- தாவரவியல் பூங்கா
- ரோஜா தோட்டம்
- குன்னூர் சிம்ஸ் பார்க்
- காட்டேரி பூங்கா
- தோட்டக்கலை துறை
- தின மலர்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும், பண்ணைகளும் உள்ளன. கோடை சீசன் சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்களை பார்த்து ரசிப்பதுடன் ரோஜா நாற்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை வாங்கிச் செல்வார்கள்.
இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயார் ஆகி வருகின்றன. இதையொட்டி, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் அமைந்துள்ள பசுமை குடிலில் ரோஜா நாற்றுகள், குறிஞ்சி மலர் நாற்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை பனி, வெயில் உள்ளிட்ட கால நிலைகளால் பாதிக்காத வண்ணம் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.