×

உதவி செய்வதாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று தனியார் வங்கிகளில் 30 பெண்கள் பெயரில் ரூ.45 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தவர் கைது: தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

சென்னை: ஐஸ்அவுஸ் பகுதியில் உதவி செய்வதாக கூறி 30 பெண்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று தனியார் வங்கிகளில் ரூ.45 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது ெசய்தனர். சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டல் சாலையை சேர்ந்தவர் நிர்மலா(35). இவர் ஐஸ் அவுஸ் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது வீட்டின் அருகே சுபத்ரா தேவி என்பவர் உள்ளார். இவரது வீட்டில் பாலாஜி(41), என்பவர் ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு கஷ்டங்களை நீக்குவதாக தன்னிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றார்.

அந்த ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் எனது பெயரில் ரூ.5 லட்சத்திற்கு லோன் பெற்று ஏமாற்றிவிட்டார். லோன் கட்டவில்லை என்று வங்கியில் அதிகாரிகள் தன்னிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்’ என புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, பாலாஜி மற்றம் சுபத்ரா தேவி ஆகியோர் திருவல்லிக்கேணி பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி, அவர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வங்கிகளில் ரூ.45 லட்சம் வரை லோன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார், மோசடியில் ஈடுபட்ட பாலாஜியை நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபத்ரா தேவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் 13க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

The post உதவி செய்வதாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று தனியார் வங்கிகளில் 30 பெண்கள் பெயரில் ரூ.45 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தவர் கைது: தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,CHENNAI ,Victoria Hostel Road, Tiruvallikeni, Chennai ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...