×

அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜர்: ஜாமீன் வழங்கி உ.பி நீதிமன்றம் உத்தரவு

சுல்தான்பூர்: அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல்காந்தி இன்று சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும் பாஜக பிரமுகருமான விஜய் மிஸ்ரா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப். 20) ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் தங்கியுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால், அவர் தனது யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் ராகுல் காந்தியின் யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்நிலையில் இன்று காலை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜர்: ஜாமீன் வழங்கி உ.பி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Rahul Gandhi ,UP ,Sultanpur ,president ,Congress party ,Wayanad ,Dinakaran ,
× RELATED ராகுல் வழக்கு 7ல் விசாரணை