×

வெந்தய முப்பருப்பு குழம்பு

Fenugreek gravyதேவையானவை:

முழு வெந்தயம் – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
பாசிப்பருப்பு,
துவரம் பருப்பு – எல்லாம் சேர்ந்து ½ ஆழாக்கு,
பூண்டு – 4 பற்கள்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 3,
பச்சைமிளகாய் – 2,
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – சிறிது,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு,
வெந்தயம் – தலா ½ டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, உடன் முழு
வெந்தயம், பருப்பு வகைகள், மஞ்சள் பொடி, உப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 200 மிலி நீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசிலில் நிறுத்தி, நன்கு மசித்து சூடான வெந்தய முப்பருப்பு குழம்பை பரிமாறவும்.

The post வெந்தய முப்பருப்பு குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிரில் ஃபிஷ்