×

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள டயர் குடோனில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் அருகே காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்கள் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. மாத்தூரில் சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனை இயங்கி வருகிறது. அதற்கு அருகே காலியிடங்களில் குப்பைகள் நிறைந்த டயர்கள் மற்றும் கெமிக்கல்கள், ஆயில் ட்ரம்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம், மணலி, மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை காரணத்தினால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையை கண்காணித்து வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனை இருக்கக்கூடிய பகுதிகளில் எளிதில் தீ பற்றக்கூடிய கிடங்குகள் செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள டயர் குடோனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Tyre Kudon ,Matur toll road ,Chennai Madhavaram ,Chennai ,Karampuga ,Mattur Manjambakkam ,Chennai Municipal Primary Health Hospital ,Mathur ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...