×

துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்..சோகத்தில் திரையுலகினர்..!!

டெல்லி: துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா சிசோடியா ராஜ்புத் குடும்ப பின்னணியை சேர்ந்த புகப்பெற்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ரிதுராஜ் சிங். கடந்த 1989ல் வெளியான இன் அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். 59 வயதான ரிதுராஜ் சிங் இந்தியில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.

தமிழில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். கடைசியாக ‘இண்டியன் காவல் துறை ஃபோர்ஸ்’ வெப் தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

The post துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்..சோகத்தில் திரையுலகினர்..!! appeared first on Dinakaran.

Tags : Rituraj Singh ,Delhi ,Kota Sisodia Rajput ,Rajasthan ,Thadhavu ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...