- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெங்கடேசன் எம்.
- சென்னை
- வெங்கடேசன் எம். பி
- பிரதமர் மோடி
- ஜம்மு
- மௌலானா அசாத்
- வெங்கடேசன் எம். கேள்வி பி
சென்னை: மதுரையை தவிர அனைத்து எய்ம்ஸுகளும் திறக்கப்பட்டு விட்டன என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார். பின்னர் விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி 25ம் தேதி கட்டி முடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, குஜராத் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 25ம் தேதி வரை ஏய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர . தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானே? என்று புகைப்படங்களை பதிவிட்டு அவர் கேள்வி எழுப்பினார்.
The post தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?: வெங்கடேசன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.