×

பாஜ நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் திடீர் சோதனை

அண்ணாநகர்: நடிகையும் பாஜ பிரமுகருமான ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருகின்றவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் தமிழக பாஜக பிரமுகராக உள்ளார். இவரது வீட்டுக்கு இன்று காலை 9.30 மணி அளவில், நீதிமன்ற சர்ச் வாரண்ட் அனுமதியுடன் திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் சிபுகுமார் ஆகியோரின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர்.

பின்னர் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். நடிகை மீது சினேகம் அறக்கட்டளை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். நடிகை வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பாஜ நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : JAYALAKSHMI ,Annanagar ,Thirumangalam Welcome Colony ,Chennai ,BJP ,Bahja ,
× RELATED போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை