×

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிரான கர்நாடக அரசின் மனு மீதான விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. காவிரி ஆற்றினை, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டமே காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம். இந்த திட்டத்துக்காக மொத்தம் 262 புள்ளி19 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில், இத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கோரி கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் கர்நாடகா பாதிக்கப்படும் என்றும், பிலிகுண்டுலு வரையிலான 284 புள்ளி 75 டிஎம்சி நீரையும், 483 டிஎம்சி உபரி நீரையும் கர்நாடகா காவிரி நீர் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான வாத பிரதிவாதங்கள் தொடர்புடைய மனுக்களை கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில வழக்கறிஞர்கள் ஒருவருக்கொருவர் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

The post காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,BOMB LINK PROJECT ,Delhi ,Karnataka government ,Kaviri ,Vaigai ,Gundaru Link Scheme ,Agniyaru ,Southern Cucumber ,Manimutharu ,Kundaru ,Bomber ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...