×

குறுவை சாகுபடியை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி; விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் அம்சங்கள் இல்லை. வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும். ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை; தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

The post குறுவை சாகுபடியை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Chennai ,Edappadi ,Palanisami ,Minister of Agriculture and Peasant Welfare ,M. R. K. Paneer Selvam ,
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்