×

விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

சென்னை: விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்; 2024-2025ஆம் ஆண்டிற்கு, பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் ஆண்டில் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு பராமரிப்பு, நடைமுறை முதலீட்டுக் கடன் இலக்காக, 2,300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2024 2025 ம் ஆண்டிற்கு, பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கென 700 கோடி ரூபாயும், ஆடு, மாடு கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடன் வட்டி மானியத்திற்கென, 200 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு கடன் வழங்கும் நிறுவனங்களை, குறிப்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைக் கணினிமயமாக்கும் திட்டம் 141 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு நிறுவனங்கள் கடன் வழங்கும் முறை இணையமயமாக்கப்பட்டு, கடன் ஒப்பளிப்பு வழங்கும் நேரம் குறைக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்படும் என்றார்.

 

The post விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Target ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Welfare ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...