×

பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 1.14கோடி மானியம்: 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு..!!

சென்னை: பனை பொருள் வளர்ச்சி பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது; தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு. பனை மரங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பனை மேம்பாட்டு இயக்கத்தினைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், 47 இலட்சம் பனை விதைகள் நடப்பட்டதுடன், 950 நபர்களுக்குத் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு. மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் கருவிகளும் அளிக்கப்பட்டு, 350 மகளிருக்கு பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் கருவிகளும் வழங்கப்பட்டன.

2024-2025ஆம் ஆண்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும். மேலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனைத்தொழிலாளர்களுக்கு, தரமான பனை வெல்லம். பனங்கற்கண்டு, பிற மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும், பயிற்சி பெற்ற அனைவருக்கும் உரிய கருவிகளும் வழங்கப்படும். இதற்கென, ஒரு கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.

The post பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 1.14கோடி மானியம்: 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Development Movement ,Minister ,MRK Panneer Selvam ,CHENNAI ,Agriculture ,Farmers' Welfare ,MRK Panneerselvam ,Legislative Assembly ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...